Poem Tamil

அம்மா

உனக்காகவே நான்,
உன்னிலே நான் – நீ

உருவாகும் முன்பே உன்னில்

நான் கொண்ட காதல்

— ஒரு தலைக் காதல் —

நிறம் தெரியா, குணம் அறியா

காலம் முதல் உன் மீது நான் கொண்ட காதல், கள்ளம் கபடம் இல்லா ” உண்மைக் காதல் ”

உணர்ச்சிகளை மட்டுமே உனக்காக
செலவழிக்கும் ” ஏழைக் காதல் ”

என் காதலை என்னில் புதைத்த ” ஊமைக் காதல் ”

காத்திருப்பதும் காத்திருக்க வைப்பதும் காதலில் சுகம் தானே!!!!!!!!!!
உனக்காக காத்திருக்கும் உன் அன்பு

”””” அம்மா””’