HealthTips Tamil

ஆண்களுக்கு எதனால் முடி உதிர்தல் பிரச்னை…

ஆண்களுக்கு எதனால் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது என்று முதலில் பார்ப்போம். ஆண்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை வர மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது பொடுகினால் ஏற்படும் முடி உதிர்தல். இது நிரந்தரமானது அல்ல, தற்காலிகமானது. இதற்கு கீட்டகோனசோல்(ketaconozole shampoo) ஷாம்பூவை, வாரம் இருமுறை வாழ்நாள் முழுக்க பயன்படுத்த வேண்டும். அடுத்தது டைபாய்ட் போன்ற காய்ச்சலுக்கு பிறகு வரும் முடி உதிர்வு. இதுவும் தீர்க்கக்கூடியதுதான்.

மூன்றாவது ஆன்ட்ரோ ஜெனிடிக் அலோபேசியா (Androgenetic alopecia) எனப்படும் முடி உதிர்தல் பிரச்னை நிரந்தரமானது. பொதுவாக அப்பாவிற்கு வழுக்கை அதனால் எனக்கும் வரும் என்று வழுக்கைக்கு நம்மூரில் ஒரு காரணத்தைச் சொல்வார்கள். உண்மையில் அப்படி எதுவும் இல்லை. ஆன்ட்ரஜன் என்ற ஹார்மோனின் ஒரு உபபொருள் கூடுதலாக இருந்தால் முடியின் வேரை அழித்து முடி உதிர்வை ஏற்படுத்தும். ஆன்ட்ரஜன் ஹார்மோனை மாத்திரைகள் மூலம் நூறு சதவிகிதம் கட்டுப்படுத்தலாம். இதனால் முடி உதிர்தலை தடுக்கலாம். ஆன்ட்ரோஜெனிடிக் அலோபேசியாவிற்கு ஃபினாஸ்ட்ரைட் 1மி.லி. (Finasteride 1 mg)என்ற மருந்தை இரண்டு வருடங்களுக்கு தினமும் இரவு தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரை ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து இருக்கிறது. 99 சதவிகிதம் அப்படியாவதில்லை.
ஆண்களுக்கான முடி உதிர்தல் காரணங்களிலிருந்து பெண்களுக்கு உள்ள முடி உதிர்தலுக்கான காரணங்கள் முற்றிலும் வேறுபட்டவை