Story Tamil

இந்தியர்கள் சாப்பிடுவதில் முதலிடம், உடற்பயிற்சியில் கடைசி இடம்

ஜெர்மனியில் உள்ள நுகர்வோர் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியர்கள் சாப்பிடுவதில் முதலிடம், உடற்பயிற்சியில் கடைசி இடமும் பிடித்துள்ளனர்.

 

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜி.எப்.கே. என்று நுகர்வோர் ஆராய்ச்சி நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் இந்தியர்கள் உணவில் முதலிடத்தையும், உறக்கத்தில் இரண்டாமிடத்தையும், உடற்பயிற்சியில் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்நிறுவனத்தின் ஆய்வு முடிவுகளின் படி நன்றாக தூங்குவதில் இந்தோனேசியா 85 சதவிகிதத்துடன் முதலிடத்தையும், இந்தியா 77 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தையும், சீனா 73 சதவிகிதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
சத்தான உணவு எடுத்துக்கொள்வதில் 79 சதவிகிதத்துடன் இந்தியா முதலிடத்தையும், 74 சதவிகிதத்துடன் இந்தோனேசியா 2 ஆவது இடத்தையும், 69 சதவிகிதத்துடன் மெக்சிகோ மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
அதே போல் உடற்பயிற்சி செய்வதில், 68 சதவிகிதத்துடன் மெக்சிகோ முதலிடத்தையும், 67 சதவிகிதத்துடன் சீனா இரண்டாவது இடத்தையும், 61 சதவிகிதத்துடன் கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இப்பட்டியலில் 45 சதவிகிதத்துடன் இந்தியா பதிமூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.