உலக நாயகனை காண உலக தமிழர்களே ரெடியாகி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை சமீபத்தில் கமல்ஹாசனுடன் அமர்ந்து குஷ்பு பார்த்துள்ளார்.
இப்படத்தை பார்த்து விட்டு தன் டுவிட்டர் பக்கத்தில் சந்தோஷமாக பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதில் ‘நேற்று மாலை உத்தம வில்லன் படம் பார்த்தேன், மிகவும் அருமையான வசனம், ஒளிப்பதிவு, உத்தம வில்லன் குறித்து ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால், இது போல் தமிழில் இதற்கு முன் எந்த படமும் வந்தது இல்லை.
கமலின் கண்களே ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது, அவர் என்றும் மாஸ்டர் தான்’ என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக டுவிட் செய்துள்ளார்.