Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை!

ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு
ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.
பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்“ என்றார்.
அதற்கு நண்பர், “உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை“ என்றார்.
பெர்னார்ட் ஷா சிரித்தபடி ஓர் உருளைக்கிழங்கை எடுத்தார். அப்பொது அது தவறி கீழே விழுந்து உருண்டு ஓடியது.
அப்பொழுது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் கழுதை அந்த உருளைக்கிழங்கைப் பார்த்தது. அருகில் சென்று முகர்ந்தது. பிறகு சாப்பிடாமல் சென்றுவிட்டது.
அதைக்கண்ட பெர்னார்ட் ஷாவின் நண்பர் கட கட… வென்று சிரித்துவிட்டார்.
பிறகு அவர், “பார்த்தீர்களா பெர்னார்ட் ஷா… கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை!“ என்றார்.
அவரை ஓரக்கண்ணால் பார்த்த பெர்னார்ட் ஷா,
“உண்மைதான். கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்“. என்றார்.
நம் விருப்பங்களும் பிறர் விருப்பங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியல் இல்லை.. பிறரை கிண்டல் செய்வதை விட்டு வாழ்வை நேசிப்போம்..

Exit mobile version