HealthTips Tamil

குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

குளிர்காலம் வந்துவிட்டாலே வீட்டில் உள்ள ஒருவருக்காவது குளிர் ஜுரம் வந்துவிடும். காரணம் குளிர்காலத்தில் நுண்கிருமிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்புச் சக்தி நம் உடலில் இல்லையென்றால் உடனே நோய்த்தாக்குதல் உண்டாகும். நோய் உண்டாக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலை நம் உடலுக்குத் தருவது ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ் எனப்படும் உயிர் வலியேற்ற எதிர்பொருள்தான். வைட்டமின் சி, வைட்டமின் இ, செலீனியம், பீட்டா கரோட்டீன் போன்ற சத்துப்பொருள்களை உள்ளடக்கியதே ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ். இந்த சத்துக்கள் அடங்கிய உணவுப்பொருட்களை உண்பதன் மூலம் நம் உடலின் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். இனி இந்தச் சத்துப் பொருட்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன என பார்ப்போமா

வைட்டமின் சி
சிட்ரஸ் பழங்கள் என அழைக்கப்படும் எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அடுத்து ஸ்ட்ராபெர்ரி பழங்கள், முளைக்கட்டிய பயறு, பச்சை மற்றும் சிவப்பு மிளகு இவற்றிலும் வைட்டமின் சி உள்ளது.

வைட்டமின் இ
சூரியகாந்தி விதை, சோயா பீன்ஸ் இவற்றில் வைட்டமின் இ அதிகம் உள்ளது.

செலீனியம்
நம் உடலுக்குத் தேவைப்படும் தனிம சத்து இது. மீன், இறைச்சி இவற்றில் செலீனியம் உள்ளது. தானியங்களிலும் செலீனியம் உள்ளது. மண்ணுக்கு அடியில் அதிக காலம் உள்ள கிழங்கு வகைகளிலும் செலீனியம் உள்ளது.

பீட்டா கரோட்டீன்
நிறமிக்க காய்கறிகளில் பீட்டா கரோட்டீன் கொட்டிக்கிடக்கிறது. உதாரணத்துக்கு பீட்ரூட், கேரட், சிவப்பு முள்ளங்கி, வள்ளிக்கிழங்கு, மாம்பழம், ஆப்ரிகாட் இவற்றில் அதிகம் உள்ளது.
இந்தச் சத்துள்ள உணவுகளை தவறாமல் சேர்த்துக்கொண்டால் உடலின் எதிர்ச்சக்தி பெருகி, குளிர்கால நோய்கள் நம்மைத்தாக்காமல் இருக்கும்