மனிதர்கள் இறந்தபிறகும் அவர்களது மூளை இயங்கிக் கொண்டிருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆம் என்கிறார் புகழ்பெற்ற பௌதீக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
கேம்பிரிட்ஜ் திரைப்பட விழாவில் பங்கு பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங் “மூளை என்பது மனதில் உள்ள ஒரு புரோகிராம் என்றே நான் கருதுகிறேன் அது கணினி போன்றது. மூளையை கணினியில் நகல் எடுத்து மரணத்திற்குப் பிறகும் கூட அதற்கு உயிரூட்ட முடியும் என்பது கோட்பாட்டு ரீதியாக சாத்தியமே” என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்!
மூளையின் செயல்பாடுகளை கணியில் நகல் எடுப்பதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.இது மூளையைப் பொறுத்த மட்டில் கூறப்படுவது, இது தவிர மேலும் சில உடல் உறுப்புகளும் மரணத்திற்குப் பிறகு வாரக்கணக்கில் கூட இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் சிலர் ஆணித்தரமாக நம்புகின்றனர்.
முடி மற்றும் நகத்திசுக்களை நம் உடல் அதிகம் உற்பத்தி செய்வதில்லை. ஆனால் மரணத்திற்குப் பிறகு சில நாட்கள் கழித்துக் கூட முடி மற்றும் நகங்கள் வளருமாம்.