Story Tamil

வேலை வேலை என்று நம்மில் பலர் வாழ்கையை தொலைத்துவிட்டோம்

ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான்,அவன் வேலை தேடி நாட்டாமை வீட்டுக்கு சென்றான்.விறகு வெட்டி நல்ல வாட்டசாட்டமாக இருப்பதை பார்த்து அவனுக்கு வேலையும் கொடுத்தார்.
அதோ தெரிகிறது பார் என் தோட்டம் அங்கே சென்று காய்ந்த மரங்களை எல்லாம் வெட்டி எடுத்துவா என்றார்.அவனும் கோடாரியுடன் கிளம்பினான்,காய்ந்த மரங்களை எல்லாம் வெட்ட ஆரம்பித்தான்.சாயந்திரம் ஆனது அவன் வெட்டிய 10 மரங்களை கொண்டு வந்து போட்டான்.
அடுத்தா நாளும் சென்றான் அவனால் 8 மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது,மூன்றாவது நாள் அவனால் 6 மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது.நாட்டாமையிடம் சென்றான் ஐயா எனக்கு உடலில் பலம் குறைந்து விட்டது போல் உள்ளது அதனால் தான் முன் போல் என்னால் அதிக மரம் வெட்டமுடியவில்லை என்றான்.
நாட்டாமை அவனிடம் கேட்டார் ’கடைசியாக எப்போது உன் கோடாரியை தீட்டினாய்…’
ஐயா இருக்கிற வேளையில் கோடரியயை தீட்ட மறந்து விட்டேன் என்றான்.
நீதி: நம்முடைய வாழ்க்கையும் இப்படிதான் வேலை வேலை என்று நம்மில் பலர் வாழ்கையை தொலைத்துவிட்டோம்.
நம்மை நம்பி இருக்கின்ற தாய், தந்தை,மனைவி மற்றும் குழந்தையுடனும் நேரத்தை செலவிடவேண்டும்.
’’கடினமாக வேலை செய்து சம்பாதிப்பதில் தவறில்லை, அதற்காக நிம்மதியாக வாழ வேண்டிய வாழ்க்கையை தொலைப்பதும் சரியில்லை’’.