Technology

ஸ்மார்ட்போன் மூலம் வருங்கால வைப்பு நிதி: விரைவில் புது செயலி அறிமுகம்

புதுடெல்லி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள சுமார் நான்கு கோடி தொழிலாளர்களும் தங்களின் வைப்பு நிதி சார்ந்த தேவைகளை விரைவில் மொபைல் போன் செயலி மூலம் இயக்க முடியும். புதிய செயலியை கொண்டு தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை பெறுவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பெற முடியும்.
ஆன்லைனில் வைப்பு நிதியை பெற உதவும் செயலி ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் ஆப்  (UMANG) உடன் இணைக்கப்படும். எனினும் இதற்கான கால அவகாசம் இன்னும் நிர்ணயம் செய்யப்பட்டவில்லை.
வைப்பு நிதி, மற்றும் இத்துறை சார்ந்த சேவைகளை பெற தற்சமயம் வரை வருங்கால வைப்பு நிதியில் 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பத்தை நேரடியாகவே சமர்பித்து வருகின்றனர். இதுவரை 110 வட்டார அலுவலகங்கள் ஏற்கனவே மத்திய சர்வெர்களுடன் இணைக்கப்பட்டு விட்டதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வருங்கால வைப்பு நிதியில் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான திட்டத்தை வகுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்தபட்சம் விண்ணப்பத்தை சமர்பித்த மூன்று மணி நேரத்திற்குள் வைப்பு நிதியை பெறமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.