Technology

தொடரும் சைபர் வில்லன்கள் அட்டகாசம்! கோடிக்கணக்கில் பறிகொடித்த ஜூமடோ!

ஹேக்கிங் செய்யும் சைபர் வில்லன்களின் பிடியில் அகப்பட்ட ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனமான ஜூமடோ கோடிக்கணக்கான ரூபாயை பறிகொடுத்துள்ளது.

ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனமான ஜூமடோ இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் செயல்படுகிகிறது. அந்நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்த சைபர் வில்லன்கள் கோடிக்கணக்கான ரூபாயை திருடியுள்ளனர்.

அந்நிறுவனம் ஹேக்கர்களிடம் 1 கோடியே 70 லட்சம் ரூபாயை இழந்துள்ளது. இதனால் அந்நிறுவனம் செய்வதறியாது திகைத்துப்போய்விட்டது. மேலும், வாடிக்கையாளர்களின் விவரங்களும் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் களவு போகவில்லை என்று அந்நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் தங்கள்ளஃ ஜுமடோ கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரியின் பாஸ்வேர்டை மாற்றிவிடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.

இரண்டு நாட்களில் ஹேக்கர்களிடமிருந்து இணையதளத்தை மீட்க தீவிரமாக முயன்று வருகிறது. ஜூமடோவின் இணையதளம் முடக்கப்படுவது இது இரண்டாவது முறை.

ஏற்கெனவே, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூமடோ நிறுவனத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.