Technology

ஐந்து நிறங்களில் தயாராகும் எச்டிசி யு 11: புது தகவல்கள்

புதுடெல்லி:
எச்டிசி நிறுவனத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் எச்டிசி யு என்ற பெயரில் அழைக்கப்படலாம் என எச்டிசி வெளியிட்ட டீசரில் தெரியவந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் இந்த ஸ்மார்ட்போன் எச்டிசி யு 11 என அழைக்கப்படும் என தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு எச்டிசி வெளியிட்ட எச்டிசி 10 ஸ்மார்ட்போனை தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போனிற்கு எச்டிசி 11 என்ற பெயரில் அழைக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கருப்பு, வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் சாம்பல்  நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியிடப்பட்ட எச்டிசி 10 மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எச்டிசி யு 11 ஸ்மார்ட்போன் மே 16-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் தைபே, நியூ யார்க் மற்றும் லண்டன் உள்ளிட்ட இடங்களில் அறிமுக நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. எச்டிசி தளத்தில் அறிமுக விழாவிற்கான கவுண்டவுன் துவங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் முழுக்க எவ்வித பட்டனும் வழங்கப்படாத உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் எச்டிசி யு ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இததுடன்  4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம்.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி செல்ஃபி கேமராவும், 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என்றும் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் குவிக் சார்ஜ் 3.0 வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.