Technology

ஹேங் அவுட்டில் ஏற்பட்ட புது மாற்றம் :

ஹேங் அவுட்டில் ஏற்பட்ட புது மாற்றம்

கூகுள் அறிமுகப்படுத்திய   ஹேங் அவுட்டினை பற்றிய செய்தி என்னவாக இருக்கும் என யூகித்து கொண்டிருக்கும் வேளையில்   ஹேங் அவுட்டின்   ios வெர்சனில் சமீபத்தில் வீடியோ மெசேஜிங் சேவைக்கு ஆதரவளித்ததுதான்  அனைவரின் ஞாபகத்திற்கு வரும் அதனையடுத்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட்டினை கூகுளின் ஹேங் அவுட் வழங்கியுள்ளது. அதன்படி   ஹேங் அவுட்டில் இனி யுனிக்  லின்க்கினை  உருவாக்கி group  invite -களை செய்து கொள்ளலாம். இந்த அம்சமானது கடந்த இரு மாதங்களுக்கு முன்பு  வாட்ஸ் அப்பில் வரப்போவதாக தகவல் வெளியானதை அடுத்து  அதற்கு முன்னதாகவே  முதல் முறையாக ஹேங் அவுட்டில்  தற்போது   வெளிவந்துள்ளது.   அதாவது  குழு  கலந்துரையாடலில் ஒவ்வொருவராக invite செய்து கொள்வதற்கு பதிலாக ஒரு யுனிக் லின்க்கினை   சேர் செய்தாலே போதும்.  இது  chat settings-ல் உள்ள பகிரக்கூடிய  (shareable link) லின்க்கினை  enable செய்வதன் மூலம்   சாத்தியமாகும். இதன் மூலம் எவரொருவர் குறிப்பிட்ட குழுக்களில் கலந்துரையாட  விரும்புகின்றனரோ யாருடைய அழைப்பும் (invite) இன்றியே  யூனிக்  லின்க்கின் உதவியுடன் குழுவில் சேர்ந்து கலந்துரையாடலாம்.
google_hangout_3434_site
 மேலும்  ஒருவர் நமது தொடர்பு பட்டியலில் இல்லாவிட்டாலும் கூட அவர்களுடன் குறிப்பிட்ட லிங்க்கினை  சேர் செய்வதன் மூலம் அவர்களுடனும்  உரையாடலாம். மேலும் பல்வேறுபட்ட குழு கலந்துரையாடல்களை குழு பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை கொன்டோ அல்லது குழுவின் தலைப்பினைக் கொண்டோ  சேர்ச் (search ) செய்து                   உரையாடிக் கொள்ளலாம்.  இவையனைத்தும்  இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஆன்றாய்டு  பயனர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும்  மற்றும் இதன்  ios பதிப்பு  கூடிய விரைவில்  அறிமுகப்படுத்தப்படும்  என கூகுள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.