Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

வாடிக்கையாளர்களை விழிபிதுக்க வைக்கும் சாம்சங் மொபைல் கோளாறுகள்!

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போனில் உள்ள புதிய வசதிகளில் பல புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 ப்ளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் அண்மையில் அறிமுகமாயின. ரூ.50க்கும் அதிகமான விலையில் விற்கப்படும் அந்த மொபைல்களில் சிறப்பு அம்சங்களாகக் கூறப்படும் பல அம்சங்களில கோளாறுகள் இருப்பதாக தகவல் வருகிறது.

இந்நிலையில், ஐரிஸ் ஸ்கேனர், ஃபேஸ் ரெகக்னிஷன் ஆகியவற்றில் குறைபாடு இருப்பதாக புகார் வந்துள்ளது. கண்மணிகளை வைத்து போனை Lock/Unlock செய்யும் வசதியை ஒரு புகைப்படம் அல்லது கான்டாக்ட் லென்ஸ் உதவியுடன் வேறு யார் வேண்டுமானாலும் முறியடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், ஃபேஸ் ரெகக்னிஷன் மூலம் Lock/Unlock செய்யும் வசதியையும் புகைப்படத்தை வைத்து யார் வேண்டுமாலும் பயன்படுத்திவிடலாம் என்று புகார்கள் பல வந்திருக்கின்றன.

இதனால், சாம்சங் நிறுவனம் ஐரிஸ் ஸ்கேனர், ஃபேஸ் ரெகக்னிஷன் வசதிகள் குறித்த குறைகளை சரிசெய்ய சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version