லூதியானா: கணவன் ஏழு மாத கர்ப்பிணியின் வயிற்றை அழுத்தி குழந்தையை எடுக்க முயற்சித்ததால் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் ஜந்தி கிராமத்தை சேர்ந்தவர் இர்விந்தர் சிங். அவரது சகோதரன் நிர்மல் சிங். இவர்கள் இருவரும் சேர்ந்து இர்விந்தரின் மனைவியை வயிற்றை அழுத்திக்கொன்று மண்ணில் புதைத்துள்ளனர். இது குறித்து இறந்த பெண்ணின் தந்தை ரவிந்தர்சிங் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
தன்னுடைய மருமகன் தன் மகளை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி வந்த்தாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ரவிந்தர் சிங்கின் புகாரின் பேரில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.
ஏற்கெனவே இர்விந்தருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக கருவுற்றிருப்பதும் பெண் குழந்தை என தெரிந்துள்ளது. இதனால், அதிருப்தி அடைந்து தனது சகோதரனுடன் இணைந்து குழந்தையை வயிற்றிலிருக்கும் ஏழு மாதக் குழந்தையை தாயின் வயிற்றை அழுத்தி வெளியே எடுக்க முயன்றுள்ளனர். இதனால், கர்ப்பிணியான அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் என்று மருத்துவ பரிசோதனையின் உதவியுடன் தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து, இர்விந்தர் மற்றும் நிர்மல் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர் மீது கொலை முயற்சி, கருக்கலைப்புக்கு வற்புறுத்தியது, குழந்தையை கருவிலேயே கொன்றது உள்ளிட்ட பல குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.