Uncategorized

வாட்ஸ்அப்பில் புது அம்சங்கள்: மிக விரைவில் வழங்கப்படுகிறது

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு விரைவில் புதிய அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. பீட்டா பதிப்பில் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்கள் சோதனை செய்யப்படும் போதே வழங்கப்படும்.
வாட்ஸ்அப் புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் மூலம் உங்களது நண்பர் இருக்கும் இடத்தை டிராக் செய்ய முடியும். இத்துடன் அவர்கள் ஸ்டேட்டஸ் மாற்றும் போது உங்களுக்கும் நோட்டிபிகேஷன் வரும். இவை தற்சமயம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் சார்ந்த தகவல்களை WABetaInfo என்ற ட்விட்டர் பயனர் ஸ்கிரீன்ஷாட் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
லொகேஷன்-ஷேரிங் (Location-Sharing)
ட்விட்டரில் WABetaInfo பதிவு செய்த ஸ்கிரீன்ஷாட்களில் லொகேஷன்-ஷேரிங் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்புகளில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தை உங்களது நண்பர்களுக்கு க்ரூப் சாட்டில் தெரிவிக்கும் அம்சம் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் பீட்டா 2.17.3.28 என்ற பதிப்பிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 2.16.399 என்ற பதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.
 
ஷோ மை ஃப்ரென்ட்ஸ் (‘Show My Friends’)
வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ள ஷோ ஃபிரென்ட்ஸ் ஆப்ஷன் நீங்கள் இருக்கும் இடத்தை சில நிமிடங்களுக்கு ஒரு முறை வழங்கும்.
புதிய ஸ்டேட்டஸ் அம்சம்:
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நீங்கள் மாற்றினால் உடனடியாக உங்களின் நண்பர்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்பட்டு விடும். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. அதன் படி புஷ் நோட்டிபிகேஷன் (push notification) மற்றும் 24 மணி நேரம் கழித்து ஸ்டேட்டஸ் அழியும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்திற்கும் தனி டேப் வழங்கப்பட இருக்கிறது. சாட், அழைப்பு மற்றும் காண்டாக்ட் உள்ளிட்டவைகளோடு ஸ்டேட்டஸ் அம்சத்திற்கும் தனி டேப் வழங்கப்படும்.
க்ரூப் மெசேஜிங் சார்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் வரும் நாட்களில் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்ற வாட்ஸ்அப் பீட்டா அம்சங்கள்:
லைவ் லொகேஷன் அம்சங்கள் தவிர ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் புகைப்படங்களை தனி ஃபோல்டரில் பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகின்றது. இத்துடன் காண்டாக்ட் அஸ் (Contact Us) என்ற பட்டன் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
வாட்ஸ்அப் கால் மேற்கொள்ளும் போது பேட்டரி தீர்ந்து போனால் வாட்ஸ்அப் சார்பில் நோட்டிபிகேஷன் அனுப்பப்படும்.
[review]