Home » World » உலகில் அதிக பேஸ்புக் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ள நபர் யார் தெரியுமா?
World

உலகில் அதிக பேஸ்புக் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ள நபர் யார் தெரியுமா?

உலகில் அதிக பேஸ்புக் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ள உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை 41.3 மில்லியன் பேஸ்புக் ஃபாலோயர்களை கடந்து இந்த சாதனையை பிரதமர் மோடி தனதாக்கியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் பக்கத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை கூட, மோடியை விட குறைவுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே, சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். இன்று வரை அதே வேகத்துடன் அவர் சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகிறார்.

இதனால்தான் மோடியால் இந்த சாதனையை படைக்க முடிந்தது என சமூக வலைத்தள வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

About the author

Julier

Add Comment

Click here to post a comment