Technology World

லிட்டருக்கு 1,153 கிமீ செல்லும் இந்தியாவுக்கு ஏற்ற கார் தயார்!

பிரான்ஸ் நாட்டின் லாவல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடிப்பு உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இவர்கள் கண்டுபிடித்துள்ள வாகனம் ஒரு லிட்டருக்கு 1,153 கிமீ செல்லும் திறனுடன் இருப்பதாலும், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற வகையில் இருப்பதும் வரவேற்கும் விதத்தில் உள்ளது.

இவர்கள் உருவாக்கியுள்ள பெட்ரோல் எரிபொருளில் இயங்கும் புரோட்டோ டைப் கார், இதுவரை இல்லாத அளவில் 1,153.41 கி.மீ தூரம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செல் ஈகோ-மாரத்தான் அமெரிக்கா என்ற போட்டியில் மாணவர்கள் உருவாக்கியுள்ள புதுவகை புரோட்டோ டைப் கார்கள் பங்கெடுத்தன.

லாவல் பல்கலைக்கழகம் கடந்த முறையும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 1.098.99 கிமீ செல்லும் கார் தயார் செய்து முதலிடத்தைப் பிடித்திருந்தது. இந்த வருடன் 1135 கி.மி செல்லும் காரை தயார் செய்துள்ளது.

பிரேசில், கனடா, கொலம்பியா, மெக்ஸிகோ, பெரு, உள்ளிட்ட நாடுகளின் 115 அணிகளை சேர்ந்த 1,200 பேர் கலந்துகொண்டனர்.

இந்த கார் மிக இலகுவான எடை காரணமாகவும், காற்றைப் பயன்படுத்தி இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் அதிக மைலேஜ் தருகின்றது.

இந்த கார்கள் அதிகபட்சம் மணிக்கு 32 கிமீ வேகம் செல்கின்றது. நாம் நடுவே எஞ்சினை ஆஃப் செய்தால் 14.48 கிமீ வேகத்தில் செல்லும்வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வகை கார்கள் தற்போது சோதனை அடிப்படையில் வாகன சோதனை சாலையில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த கார்களின் வடிவமைப்பு சில ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் உருப்பெரும்.

அப்படி வடிவமைப்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி மாற்றப்பட்டால் சீனா, இந்தியா போன்ற பெரிய நாட்டில் இதனால் பல லட்சம் லிட்டர் சேமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.