World

சோமாலியாவில் கடும் வறட்சி; சாகும் நிலையில் 20,000 குழந்தைகள்…!

மொகதிசு: சோமாலியாவில் கடும் வறட்சி காரணமாக, சாகும் நிலையில் 20,000 குழந்தைகள் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தற்போது கடும் பஞ்சம் நிலவி வருகிறது. போதிய ஊட்டச்சத்துக்கள் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அதில் குழந்தைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில் கன்சர்ன் வோல்ட்வைட் மற்றும் ஆக்‌ஷன் அகைன்ஸ்ட் ஹங்கர் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன. சோமாலியாவின் 9 மாவட்டங்களில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் போதிய ஊட்டச்சத்துக்கள் இன்றி, சாகும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மடபன் என்ற மாவட்டத்தில் மட்டும், 5 வயதுக்கும் உட்பட்ட 9.5% குழந்தைகள் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் இன்றி தவிக்கின்றனர். உடனடியாக சர்வதேச அமைப்புகள் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் குழந்தைகளை காக்க இயலாத சூழல் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.