Business World

மனிதக் கழிவிலிருந்து தங்கம்-அமெரிக்காவில் ஆய்வு

அமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரும் கழிவுகளில் எந்த அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பது குறித்த ஆய்வு நடைபெறுகிறது.

மனிதக் கழிவுகளில் இருக்கக்கூடிய தங்கத்தை பிரித்து எடுக்க முடியுமா என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

அமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரும் கழிவுகளில் எந்த அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பது குறித்த ஆய்வு நடைபெறுகிறது.

பாறைகளில் இருக்கக் கூடிய அளவுக்கு அந்தக் கழிவுகளில் தங்கம் இருக்குமாயின், அதிலிருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது என்பதில் கவனம் செலுத்துவது பலனைத்தரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கழிவுகளில் இருந்து கனிமங்களை பிரித்தெடுக்கும்போது, அவை சுற்றுச்சூழலில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை விடுவிப்பதை தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்படும் தங்கத்தின் அளவு, பாறைகளில் மிகக் குறைந்த அளவில் இருக்கும் தங்கத்துக்கு ஒப்பாகும் என்று இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள அமெரிக்க மண்ணியல் ஆய்வு அமைப்பை சேர்ந்த டாக்டர் கேத்லீன் ஸ்மித் கூறுகிறார்.

அந்தக் கழிவுகளில் தங்கத்தை தவிர, வெள்ளி மற்றும் பலேடியம் மற்றும் வெனேடியம் போன்ற அபூர்வத் தாதுப் பொருட்களும் காணப்பட்டன என்று அவர் மேலும் கூறுகிறார்.

எனவே இது குறித்து கூடுதலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

ஒரு லட்சம் அமெரிக்கர்களின் மனிதக் கழிவுகளில் இருந்து 13 மில்லியன் டாலர்கள் அளவுக்கு பெருமதியான உலோகத்தை பெற முடியும் என மேலும் ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் அமெரிக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலயங்களில் இருந்து ஏழு மில்லியன் டன்கள் திடக் கழிவுகள் வெளியாகின்றன. அவற்றில் பாதியளவு வயல் மற்றும் காடுகளில் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சியவை எரிக்கப்பட்டு நிலத்தை சமன் செய்ய உபயோகப்படுத்தப்படுன்றன.