Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

மதுரையில் அமையவுள்ளதா பிரமாண்ட கூகுள் நிறுவனம்?

Advertisements

மதுரை அல்லது சென்னையில் கூகுள் நிறுவன கிளையை அமைக்க அந்நிறுவன தலைவர் சுந்தர் பிச்சையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி எழுப்பிய கேள்விக்கு, தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் பதிலளித்துப் பேசினார். அதில், மதுரை அல்லது சென்னையில் கூகுளின் நிறுவன கிளையை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், அந்நிறுவன தலைவர் சுந்தர்பிச்சை தனிப்பட்ட விஷயமாக தமிழகம் வந்துள்ளதால், அவரை சந்திக்கவில்லை. விரைவில் அவரை சந்தித்து இந்த விஷயம் குறித்து பேச உள்ளதாக விளக்கம் அளித்தார்.

மதுரைக்கு அதிக வாய்ப்பு:
ஏற்கனவே பல ஐடி நிறுவனங்கள் சென்னையில் உள்ளதால், கூகுள் நிறுவனம் மதுரையில் அமைய வாய்ப்புள்ளதாக கருத்து எழுந்துள்ளது.

Exit mobile version