ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் தோற்றத்தில் சிறிய மாற்றங்கள் செய்துள்ளது.
ட்விட்டர் சமூக வலைத்தள நிறுவனம் தனது இணையதளத்தின் தோற்றத்தை சிறு சிறு மாற்றங்களுடன் புதுமையாக்கியுள்ளது. மொபைல், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கான இணையதளம் மற்றும் அப்ளிகேஷன் தோற்றமும் மாறிவிட்டன.
ஐகான்கள் மாறிவிட்டன. ப்ரொஃபைல் படம் சதுர வடிவில் இருந்து வட்டமாக மாறியுள்ளது. இந்த மாற்றங்கள் பெரிதாக எதையும் அளிக்கவில்லை என்றாலும் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
இந்நிலையில், ட்விட்டரின் தனியுரிமை கொள்கைகளும் நிபந்தனைகளும் ஜூன் 18, 2017 (நாளை மறுநாள்) முதல் மாற்றம் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் லைவ் வீடியோக்களைத் தொகுத்து முகப்புப் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் திட்டத்தையும் ட்விட்டர் அறிமுகப்படுத்தவுள்ளது.