Business

ஆன்லைனில் வருமான வரியை திரும்பப் பெறுவது எப்படி?

வருமான வரி பிடித்த தொகையை திரும்பப் பெற உதவும் 6 எளிய வழிகள் பற்றி பார்க்கலாம்.

ஸ்டெப்1: வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உங்கள் பான் எண்ணை சமர்ப்பித்து, ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். பின்னர், உங்களுக்கென தனி ஐடி, பாஸ்வேர்டை உருவாக்கவும்.

ஸ்டெப்2: தேவையான வருமான வரித்தொகையை திரும்பப் பெறும் படிவத்தை டவுன்லோட் செய்யுங்கள். அதனை, உங்களது டெஸ்க்டாப்பில் சேமித்து, பூர்த்தி செய்யவும்.

ஸ்டெப்3: தனிநபர் வருமானம், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு வைத்திருப்பது, தொழில் முனைவோர் என 3 வகைகளில் இருக்கும் படிவங்களில் உங்களுக்கு தேவையானதை மட்டும் தேர்வு செய்யுங்கள்..

ஸ்டெப்4: பான், ஃபார்ம் 16, வருமான ஆதாரங்கள், டிடிஎஸ் ஆவணங்கள், இன்சூரன்ஸ், ஆகியவற்றை கையில் வைத்தபடி, 26ஏஎஸ் படிவத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்யுங்கள்..

ஸ்டெப்5: அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்தபின், ஜெனரேட் எக்ஸ்எம்எல் என இருக்கும் பட்டனை கிளிக் செய்யவும். அதனை டெஸ்க்டாப்பில் சேமித்து, பின்னர் அப்லோட் செய்யலாம்.

ஸ்டெப்6: இறுதியாக வருமான வரி ஆவணங்களை சமர்ப்பிக்கும் முன்பாக, உங்களது இமெயில் முகவரி மூலமாக, ஐடிஆர் வி சரிபார்க்கவும். உங்களின் டிஜிட்டல் கையெழுத்து அந்த ஆவணத்தில் உள்ளதா என்பதை கவனிக்க தவறிவிடாதீர்கள்…