மாத ஊதியம் பெறுபவர்களுக்கு, அவர்கள் பெறும் ஊதியத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்த அளவு ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் மாற்றப்படுவதும் உண்டு. கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானம் பெறுவோர்க்கு 5% வரி குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2017-2018ஆம் நிதியாண்டில் அனைத்து விதமான வயதினருக்குமான வரி சதவீதத்தை இங்கே விரிவாக காணலாம்.
1) 60 வயதுக்கு உட்பட்டவருக்கான வரிவிதிப்பு முறை
ரூ.2,50,000 வரை – எதுவுமில்லை
ரூ.2,50,001 முதல் ரூ.5,00,000 – 5% (மொத்த வருமானம் ரூ.2,50,000 இருந்து கணக்கீடு)
ரூ.5,00,001 முதல் ரூ.10,00,000 – ரூ.12,500 + 20%(மொத்த வருமானம் ரூ.5,00,000 இருந்து கணக்கீடு)
ரூ.10,00,000 அதிகமாக – ரூ.1,12,500 + 30%(மொத்த வருமானம் ரூ.10,00,000 இருந்து கணக்கீடு)
2) 60 வயது முதல் 80 வயது வரையிலானவர்களுக்கு வரிவிதிப்பு முறை
ரூ.3,00,000 வரை – எதுவுமில்லை
ரூ.3,00,001 முதல் ரூ.5,00,000 – 5% (மொத்த வருமானம் ரூ.3,00,000 இருந்து கணக்கீடு)
ரூ.5,00,001 முதல் ரூ.10,00,000 – ரூ.10,000 + 20%(மொத்த வருமானம் ரூ.5,00,000 இருந்து கணக்கீடு)
ரூ.10,00,000 அதிகமாக – ரூ.1,10,000 + 30%(மொத்த வருமானம் ரூ.10,00,000 இருந்து கணக்கீடு)
3) 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரிவிதிப்பு முறை
ரூ.5,00,000 வரை – எதுவுமில்லை
ரூ.5,00,001 முதல் ரூ.10,00,000 – 20% (மொத்த வருமானம் ரூ.5,00,000 இருந்து கணக்கீடு)
ரூ.10,00,000 அதிகமாக – ரூ.1,00,000 + 30%(மொத்த வருமானம் ரூ.10,00,000 இருந்து கணக்கீடு)