Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

நல்ல படத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கிகாரம்

Advertisements

தமிழ் மக்கள் என்றுமே தரமான படத்தை பாராட்டாமல் இருந்தது இல்லை. அந்த வகையில் கடந்த வாரம் வெளிவந்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சென்னையில் ஒரு உதவி இயக்குனராக இளைஞர்கள் படும் கஷ்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. இப்படம் விமர்சகர்களால் மட்டுமின்றி தன் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போராடும் ஒவ்வொரு பேச்சுலர்ஸுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படம் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தியேட்டர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள ஆல்பர்ட் , மாயாஜால் போன்ற திரை அரங்குகளில் மேலும் 3 காட்சிகளை அதிக படுத்தியுள்ளனர் . ஒரு தரமான படத்தை என்றுமே தமிழ்நாட்டு மக்களை கவரும் என்பதற்கு இதுவே சாட்சி

Exit mobile version