Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

‘தேசிய விருதுகள் ஒருதலை சார்புடன் வழங்கப்பட்டுள்ளன’ – ஏ.ஆர்.முருகதாஸ் காட்டம்

64-வது தேசிய விருதுகள் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஒருதலை சார்புடன் விருதுகள் அளிக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் முருகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

64-வது திரைப்பட தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் திரைப்படமாக ‘ஜோக்கர்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. பாடலாசிரியருக்கான விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது. மேலும், ’24’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவுக்காகவும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கதில் தேசிய விருதுகள் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். நடுவர்களின் செல்வாக்கும், ஒரவஞ்சனையும் மட்டுமே விருதுகளில் தெரிவதாகவும், ஒருதலை சார்பாக விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து முருகதாஸ் பதிவுக்கு சமூக வலைதளத்தில் கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version