அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இதில் அவருடைய சாதனைகள் பற்றிய வரிகள் உள்ளன. இந்த பாடலுக்காக அனிருத் பல ராகங்களை போட்டு காட்ட, அதில் ஒரு ராகத்தை அஜித் தேர்ந்தெடுத்துள்ளாராம். அது ‘தீம்’ பாடலாக உருவாகி இருக்கிறதாம். அதிரடி இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் என்று அனிருத் அடித்துச் சொல்கிறார். விவேகம் ஆகஸ்ட் 11 ந்தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாலிவுட் லைப் சினிமா இணையதளத்தில் விவேகம் படத்தின் சில புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளது. அதில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
- விவேகம் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பாணியில் உருவாகி இருக்கும் படம். அஜித், விவேக் என்ற இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
- காஜல் அகர்வால் வெளிநாட்டில் வாழும் இந்திய குடும்ப பெண்ணாக நடிக்கிறார். அஜித்தின் காதலியும் அவர்தான். அக்ஷ்ரா ஹாசன் வெளிநாட்டில் பிறந்த வளர்ந்த வெளிநாட்டு பெண்ணாகவே நடிக்கிறார். அஜித்துக்கு உதவும் கேரக்டர். ஆக்ஷ்ன் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு வந்த செய்திகளை போன்று பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லன் அல்ல, பாசிட்டிவான கேரக்டர்.
- “இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லாச் சூழ்நிலைகளும் நீ தோத்துட்ட… தோத்துட்ட…ன்னு உன் முன்னாடி வந்து அலறினாலும், நீயாக ஒப்புக்கிறவரைக்கும் எவனாலும் உன்னை எங்கேயும் எப்பவும் ஜெயிக்க முடியாது” டீசர்ல வருகிற இந்த வசனம்தான் கதை. “என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கைதான் பலம்” என்பது படம் சொல்ல வருகிற மெசேஜ்.
- இண்டர் நேஷனல் ஆக்ஷ்ன் கதையாக இருந்தாலும் குடும்ப உறவுகளுக்கும், செண்டிமென்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது படம்.
- செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷி ஆகிய நாடுகளில் 97 சதவிகித படப்பிடிப்பு நடந்துள்ளது. கதையும் அங்குதான் நடக்கிறது. 3 சதவிதம் மட்டுமே சென்னை காட்சிகள்.
- ஆஸ்திரியா நாட்டில் மைனஸ் 12டிகிரி குளிரில் எல்லோரும் 3 லேயர் உடை அணிந்து நடித்தபோது அஜித் கிழிந்த சட்டை அணிந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.
- அஜித்தின பைக் ரேஸ் படத்தில் முக்கியமானதாக இருக்கும், பனியில், மலையில், நெடுஞ்சாலையில், கரடுமுரடமான பாதையில் டூப் போடாமல் பைக் ஓட்டி அசத்தியிருக்கிறார்.
- இதில் அஜித், செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷி நாடுகளில் தீவிரவாதிகளை வேட்டையாடுவார். இதற்கு உதவுவது அந்தந்த நாட்டு ராணுவம்.
- அமிலி என்கிற போர்ஸிய நடிகை, செர்ஜன் என்கிற செர்பியன் நடிகை உள்பட பல வெளிநாட்டு நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
- படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து உலகம் முழுவதும் வெளியிடும் திட்டமும் இருக்கிறது.
- விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா, அஜித் கூட்டணியே இணைய வாய்ப்பிருக்கிறது. அது விவேகத்தின் இரண்டாம் பாகமாகவோ அல்லது வேறு கதையாகவோ இருக்கலாம். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கலாம்.