education

இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்தது உ.பி. அரசு

லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இந்நிலையில், உத்திர பிரதேசத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓ.பி.சி.-க்கான இட ஒதுக்கீட்டை யோகி ஆதித்யநாத் அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மாநில மேம்பாட்டிற்காகவும், ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி கல்வித் துறையில் பல்வேறு சீரமைப்புகளை உ.பி. அரசு கொண்டு வந்துள்ளது. நர்சரி வகுப்புகளில் இருந்து ஆங்கில மொழியை அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே 6-ம் வகுப்பு முதல் ஆங்கில மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.
பள்ளிகளில் கட்டாயமாக யோகா மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.