தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று பல Reality நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் மிகவும் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றில் ஈழத்து சிறுமி ஜெசிக்கா கலந்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே.இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஜெசிக்கா தான் முதலிடத்தில் வந்தார் என கூறப்பட்டது, ஆனால், அந்த தொலைக்காட்சி இவரை தங்கள் TRPக்கு மட்டும் பயன்படுத்தி கொண்டு, இறுதியில் இரண்டாம் பரிசு கொடுத்தது. இந்த சம்பவம் ஈழத்தமிழர்கள் மனதை மிகவும் பாதித்தது.இந்நிலையில் சமீபத்தில் அந்த தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் யாருக்கும் திருப்தி இல்லாமல் தான் நடந்து முடிந்துள்ளது. தங்கள் விழாவிற்கு யார் வருகிறார்களோ, அவர்களுக்கு தான் விருது வழங்கப்பட்டுள்ளது. திறமைக்கு மரியாதை இல்லாமல் அரங்கேறியுள்ளது.இதை அறிந்த பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்த்துள்ளனர். மேலும், இத்தனை வருடங்களில் இது தான் மிகவும் மோசமான விருது விழா என நேரில் பார்த்தவர்களே கூறியுள்ளனர். இதை கண்ட சிலர் ஈழத்து தமிழர்களை ஏமாற்ற நினைத்த போதே, இவர்கள் கதை முடிய ஆரம்பித்து விட்டது என்று கமெண்ட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
அன்று ஈழத்தமிழனை ஏமாற்றியதால், இன்று விருது விழாவே அழிந்தது
