Advertisements
இந்த வருடம் ஆரம்பத்திலேயே ஐ, ஆம்பள, டார்லிங் என வரிசையாக படங்கள் களம் கண்டது. இதில் ஐ படம் நல்ல வசூலை தந்தாலும், படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் சுமார் லாபம் தான்.இதேபோல் தான் என்னை அறிந்தால் ரூ 100 கோடியை தாண்டினாலும், படத்திற்கு வரிவிலக்கு அளிக்காததால் ஹிட் வரிசையில் மட்டும் இடம்பெற்றுள்ளது.அனேகன் படத்தின் வசூல் ரூ 60 கோடி என்று பில்டப் கொடுத்தாலும் உண்மையாகவே இப்படத்தினால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளதாம். சிவகார்த்திகேயன் நடிப்பில் காக்கிசட்டை படம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும், வசூலில் எந்த பாதிப்பு இல்லாமல் ரூ 50 கோடியை தாண்டியுள்ளதாம். மேலும், இப்படத்தின் பட்ஜெட் சுமார் 12 கோடி தான் என்பதால், இந்த வருடத்தில் அதிக லாபம் கொடுத்த படம் காக்கிசட்டை தானாம்.

