Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

இனி எனக்குத்தான்…..

 

பசி தாங்க முடியாத எலிகள்
இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த
வீட்டின் சமயல் அறைக்குள்
புகுந்தன. அங்கே ஒரு பெரிய
பானை நிறைய பால் இருப்பதைக்
கண்டன. ஆனால் அது உயரமான
பானை. இதனால் பாலைக் குடிக்க
முடியாமல் எலிகள் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும்
ஒரு முடிவுக்கு வந்தன. ஓர்
எலியின் மீது இன்னோர்
எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன்
பிறகு கீழே உள்ள எலி மேல்
ஏறி பாலைக் குடிக்கலாம் என
திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.
அதன்படி மேலே உள்ள எலி பாலைக்
குடித்த போது, கீழே இருந்த
எலி கத்தியது: “போதும்! நான் பால்
குடிக்க வேண்டும்…”
கீழே இருந்த எலி போட்ட
சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே
இருந்த எலி, பால் பானைக்குள்
விழுந்துவிட்டது.
இதைக் கண்ட கீழே இருந்த எலி,
“நல்லது, இனி எனக்குத்தான்
எல்லா பாலும்” என்று நினைத்தது.
பிறகு அந்தப் பானையைச்
சுற்றி சுற்றி வந்தது. ஆனால்
மேலே ஏற முடியவில்லை.
கடைசியில் பசியால் அது செத்துப்
போய்விட்டது.

துன்பத்தில்
இருந்து விடுதலை அடைய
மற்றவர்களின் ஒத்துழைப்புத்
தேவை.

Exit mobile version