இளைய தளபதி எப்போதும் மாஸ், கமர்ஷியல் படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார். ஆனால், என்ன தான் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவை கத்தி போன்று தரமான படமாக தான் இருக்க வேண்டும் என்று கவனமாக உள்ளார்.இந்நிலையில் அடுத்து வளர்ந்து வரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன், இளைய தளபதி இணைவதாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வந்தது. சமீபத்தில் வந்த தகவலின்படி இதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டதாம், விரைவில் இதுக்குறித்து அதிகாராப்பூர்வ அறிவுப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. விஜய் இப்படி திறமையான இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்தது அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.