இளைய தளபதி விஜய்யின் பிறந்த நாள் இன்றைக்கு மிக சிறப்பாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாட பட்டு வருகிறது. விஜய்க்கு தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவூட் பிரபலங்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இப்படி போயிருக்கையில் திடீரென அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக ஒரு ஹாஷ்டாக்(#VijayTheCurseOfCinema) உருவாக்கி அதை இந்திய அளவில் டிரெண்டிங்கில் கொண்டு வந்தனர். அதாவது “விஜய் சினிமாவுக்கு சாப கேடு” என டிரெண்டிங் செய்தனர். இதை பார்த்து அனைத்து பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே விவேக் , சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். சிம்பு செய்த டிவீட்டில் , “இப்படி செய்வதால் அஜித்தின் தரம் கெடுகிறது. தயவு செய்து இந்த முட்டாள் தனமான காரியங்களை நிறுத்துங்கள்.” என கூறியுள்ளார். இவ்வாறு பல சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துகளை கூறியுள்ளனர். அதுவும் அவருடைய பிறந்த நாளில் செய்வது எவ்வளவு வருந்தக் தக்க செயல் என அறியாமல் செய்து வருகின்றனர். ஆனால் அஜித் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். அதனால் அவரது ரசிகர்கள் எல்லை மீறி கொண்டிருக்கின்றனர். இந்த செயலை தடுக்க இனியாவது அஜித் தனது கருத்தை தனது ரசிகர்களுக்கு சொல்லுவாரா என பார்க்கலாம் !!!