Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

எளிமையாக நடந்தது ;அஜித்குமார் மகன் பெயர் சூட்டு விழா!!!

Advertisements

அஜித்குமார்-ஷாலினி தம்பதியின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா, சென்னையில் எளிமையான முறையில் நடந்தது. குழந்தைக்கு, ‘ஆத்விக்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆண் குழந்தை

நடிகர் அஜித்குமார்-ஷாலினி தம்பதிக்கு 6 வயதில், அனோஷ்கா என்ற மகள் இருக்கிறாள். அனோஷ்கா, சென்னையில் உள்ள ஒரு பள்ளியில், 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

6 வருடங்களுக்குப்பின், ஷாலினி கர்ப்பமானார். அவருக்கு கடந்த மாதம் 2-ந் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்ததை அவருடைய ரசிகர்கள் அமர்க்களமாக கொண்டாடினார்கள். குழந்தைக்கு, ‘‘குட்டி தல’’ என்று ரசிகர்களே செல்லமாக பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

ஆத்விக் அஜித்குமார்

குழந்தைக்கு முறைப்படி பெயர் சூட்டும் நிகழ்ச்சி, சென்னை திருவான்மியூரில் உள்ள அஜித்குமார் வீட்டில் நேற்று காலை நடந்தது. அஜித்-ஷாலினி தம்பதியின் ஆண் குழந்தைக்கு, ‘ஆத்விக் அஜித்குமார்’ என்று பெயர் சூட்டப்பட்டது. ‘ஆத்விக்’ என்றால், ‘தனிப்பட்ட’ என்பது பொருள் என்று ‘தினத்தந்தி’ நிருபரிடம், அஜித் தெரிவித்தார்.

பெயர் சூட்டும் நிகழ்ச்சி எளிமையான முறையில் நடந்தது. அதில் அஜித்குமாரின் பெற்றோர்கள், ஷாலினியின் பெற்றோர்கள் மற்றும் அண்ணன் ரிச்சர்டு, தங்கை ஷாமிலி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Exit mobile version