அஜித் தன் ரசிகர்களுக்காக எந்தவித ரிஸ்க்கான காட்சிகளிலும் நடிப்பார். அந்த வகையில் வேதாளம் படத்தின் இடைவேளையில் வரும் சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் பல காட்சிகளில் நடித்துள்ளார்.
இதுக்குறித்து ஸ்டண்ட் சில்வா கூறுகையில் ‘அந்த காட்சியை எடுக்கும் போது வில்லன், அஜித் சாரை அடிக்கையில் அவருடைய கழுத்தில் அடிப்பட்டு விட்டது. அவர் உடனே அந்த இடத்தில் மயங்கி விழுந்தார், பிறகு மருத்துவர் வந்து பார்த்த பிறகு “ஓகே மாஸ்டர் 10 நிமிடம் எனக்கு ஓய்வு தாருங்கள்” என கேட்டார். ஆனால், அவருடைய கண்ணீல் அவரை அறியாமலேயே கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.அந்த வலியையும் பொறுத்துக்கொண்டு அந்த காட்சியில் அஜித் நடித்துக்கொடுத்தார்’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.