Advertisements
அஜித், விஜய் படங்கள் கடைசியாக ஜில்லா, வீரம் ஒரே நாளில் வந்தது. இந்நிலையில் மீண்டும் இருவரும் ஒரே நாளில் களம் இறங்கவுள்ளனர்.ஆனால், இந்த முறை திரையரங்கில் இல்லை, சமூக வலைத்தளத்தில். ஆம், புலி படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14ம் தேதி சித்திரை முதல் நாள் தான் வரவிருக்கின்றது.அன்றைய தினம் தான் அஜித்-சிவா படத்தின் பூஜை போடப்படுகிறது. மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தாலும் ஆச்சரியம் இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அப்பறம் என்ன? தலதளபதி ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டில் முதல் நாளே கொண்டாட்டம் தான்.

