Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

தள்ளி போகிறது புலி

Advertisements

கத்தி படத்தின் வெற்றி அடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் சரித்திர கால கதையில் நடித்து வருகிறாா். விஜய்யின் இரட்டை வேடத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் புலி.

இப்படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என இரண்டு காதநாயகிகள் நடிக்க இவர்களுக்கு சமமான கதாபாத்திரத்தில் முன்னாள் கனவு கன்னி ஸ்ரீதேவி நடிக்கிறார். சுதீப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு நட்டி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலுக்கே வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது படத்தின் தலைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ‘புலி’யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யின் தோற்றத்தை காண ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இருப்பதால் தமிழ் புத்தாண்டை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version