விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்து வரும் ஜி.வி.பிரகாஷ், ஐந்து பாடல்களையும், ஒரு தீம் மியூசிக்கையும் கம்போஸ் செய்துள்ளதாகவும், இன்னும் ஒரு தீம் மியூசிக்கை அவர் கம்போஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஒரு பாடலை விஜய் பாடியுள்ள நிலையில் இன்னும் ஒரு பாடலையும் அவர் விரைவில் பாடவுள்ளதாகவும், பாடல்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஜி.வி.பிரகாஷூக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.