இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படம் கண்டிப்பாக ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.இந்நிலையில் இப்படத்தில் விஜய் இரண்டு விதமான கெட்டப்பில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் ஒன்று குள்ள மனிதராக நடிப்பதாக முன்பே கூறப்பட்டது.தற்போது அதற்கான ஷுட்டிங் தான் நடந்து வருவதாகவும், படப்பிடிப்பில் விஜய்யின் கெட்டப்பை யாரும் வெளிவிடக்கூடாது என்பதற்காக மொபைல் போன்கள் பயன்படுத்த கூடாது என்று கடும் கண்டிஷன் போட்டுள்ளார்களாம்.