இளைய தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்களையும் கவரும் படி புலி படம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது.இந்நிலையில் தற்போது புலி படக்குழுவினர்கள் ஒரு பாடலுக்காக கம்போடியா சென்றுள்ளனர். ஏற்கெனவே படத்தில் ஸ்ருதி, ஹன்சிகா இருக்க தற்போது நந்திதாவும் இணைந்துள்ளார்.இதனால், விஜய்யுடன் டூயட் பாட எந்த நடிகை வெளிநாடு பறந்தார் என்று ஒரு குழப்பம் நீடிக்க, சமீபத்தில் வந்த தகவலின் படி ஹன்சிகாவிற்கு தான் அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளதாம். மேலும், இப்பாடலில் 40க்கு மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடவுள்ளார்களாம்.