Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

உத்தமவில்லன் படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Advertisements

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள உத்தம வில்லன் படம் நாளை(மே 1–ந் தேதி) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தமவில்லன் படத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் பாடல் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று காலையில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகில் உத்தமவில்லன் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போலீஸ் அனுமதியுடன் நடந்த இந்த போராட்டத்தில் நடிகர் கமல்ஹாசனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. போலீசார் அதை தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்

Exit mobile version