Advertisements
சமூக வலைத்தளங்கள் பற்றி நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
‘‘ஒரு பைத்தியக்காரன் கையில் துப்பாக்கி இருப்பதும், சமூக அக்கறை இல்லாதவர்களின் கையில் இணையதள அமைப்புகள் (பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப்) இருப்பதும் ஒன்று தான்.
இதுவெல்லாம் சமுதாயத்தில் பல சாதி–மத கலவரங்கள் ஏற்படுவதற்கு கூட வழிவகை செய்துவிடுமோ என்று அச்சம் இருக்கிறது.
எத்தனையே உபயோகமான விஷயங்கள் பரிமாறப்பட்டாலும் சில தவறான தகவல்களும் மக்களை சென்றடைகின்றன. இப்படியே போய் கொண்டிருந்தால், இதில் அரசு தலையிட்டு வாட்ஸ் அப்பை மூடக்கூடிய நிலைமை ஏற்படலாம்’’.
இவ்வாறு நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

