Indians

ஏர் ஏசியா பம்பர் ஆபர் !!! சென்னை டு பெங்களூர் விமான கட்டணம் 550 மட்டுமே …

பெங்களூர், மார்ச் 23-

ரெயில் கட்டணத்தை விட மலிவான செலவில் விமான சேவை வழங்க தனியார் விமான நிறுவனங்கள் தொழில் போட்டியில் குதித்துள்ளன.

இதில் உச்சகட்டமாக சென்னயில் இருந்து பெங்களூருக்கு செல்ல மிக குறைந்த கட்டண சலுகையை ஏர் ஆசியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையில் 1-9-2015 முதல் 31-5-2016 வரையிலான பயண தேதிகளுக்கு 29-3-2015-க்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.550 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இதேபோல், மேற்கண்ட தேதிகளுக்கிடையே பெங்களூரில் இருந்து கொச்சிக்கு ரூ.750, பெங்களூரில் இருந்து கோவாவுக்கு ரூ.950, பெங்களூர்-சண்டிகர் மற்றும் பெங்களூர்-ஜெய்ப்பூருக்கு ரூ.1,550 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் 29-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.