Indians ஆன்மிகம்

420 கிலோ சங்கினால் உருவான விநாயகர்: கின்னஸில் இடம்பெற பெண் முயற்சி

மைசூரு: கின்னஸ் சாதனை படைப்பதற்காக 420 கிலோ சங்கினால் விநாயகர் சிலை செய்து பெண் சாதனை படைத்துள்ளார்.மைசூரு மாவட்டம்,நஞ்சன்கூடு தாலுகா, ஹாலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ராதா மல்லப்பா. இவர்  கடந்த கலாஸ்ரீபந்தர் விழாவில் 420 கிலோ கடல் சங்கினால் ஆன விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார். இந்த சிலையானது அவரது வீடு மற்றும் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறும்போது இந்த சாதனையை நான் செய்து முடிப்பதற்காக  கடந்த 2012ம் ஆண்டில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக மேற்கொண்டேன்.

மேலும் இதற்கு  தேவையான சங்குகளின் 20சதவீதம் மட்டும் எனது தனிப்பட்ட செலவிலும் மற்ற 80சதவீத செலவுகள் அனைத்தும்  ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் பல உலக நாடுகளின் உதவியோடு உருவாக்கப்பட்டது. மேலும் இதற்கு தேவையான சங்குகளை தமிழகத்தின் ராமேஸ்வரத்தின் பகுதியில் இருந்து வாங்கப்பட்டது. மேலும் இந்த சிலையை உருவாக்க எனக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்டது என கூறினார்.இதைத்தவிர இந்த சாதனை விநாயகர் சிலையை செய்ய மொத்தம் ரூ.6 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராதா மல்லப்பா இந்த சிலையை கின்னஸ் சாதனை போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக கடந்த மார்ச் மாதமே இந்திய அரசின் அனுமதி சான்றிதழை பெற்றுவிட்டார் என்பது முக்கிய குறிப்பாகும். இதைத்தவிர நமது நாட்டில் உள்ள பல பிரதான சின்னங்களை உருவாக்கி தேசிய அளவில், கிட்டூர் ராணிசென்னம்மா, ஒய்சாலா, கலாசரஸ்வதி, ஆர்யபத்தா மற்றும் விஸ்வேஷரய்யா போன்ற முக்கிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.