Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

Anantha Pathmanabha Nadar அனந்த பத்மநாபன் நாடார்

Anantha Pathmanabha Nadar

“அழிக்கப்பட்ட தமிழ் மாவீரனின் வரலாறு”

ஐரோப்பிய படையை தன் பலத்தினால் வென்ற மாவீரன் “அனந்த பத்மநாபன் நாடார்”. இவர் கி பி 1698 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தச்சன்விளையில் பிறந்தார். இளம் வயதிலேயே வாள் வீச்சு,ஈட்டி எறிதல்,சிலம்பம், வர்மம் போன்ற போர் கலைகளில் சிறந்து விளங்கினார்.

108 நாடார் சிலம்பகளங்களுக்கு தலைவராக இருந்தார். தென் திருவாங்கூரில் கி பி 1728 ல் ஏற்பட்ட வாரிசுரிமை போரில் எட்டு வீட்டுப்பிள்ளைமார் எனப்பட்ட பிரதானிகளை தோற்கடித்து மார்தண்டவர்மனை அரசாணையில் ஏறவைத்தார். பின்னர் கி பி 1741-ல் நடைபெற்ற குளச்சல் போரில் டச்சுக்காரர்களை தனது 108 நாடார் சிலம்பகளங்களின் ஆசான்மார்களையும் மீனவ சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து தனது திறமையினால் போரிட்டு வெற்றி பெற்று டச்சுப்படையின் தளபதி டிலனாயை கைது செய்து மார்தண்டவர்மா முன் நிறுத்தினார். இதனால் திருவாங்கூரில் இவரது புகழ் மேலோங்கி காணப்பட்டது.

பின்னர் நய வஞ்சகற்களின் நயவஞ்சகத்தினால் கி பி 1750 ஆண்டு மாவீரன் வீர மரணம் அடைந்தார். இதற்கு சான்றாக மாவீரனின் புகைப்படம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது.இவரது சமாதி தச்சன் விளையில் உள்ளது. அவர் மறைந்தாலும் அவரது புகழ் மேலோங்கி காணப்பட்டது.
பிற்காலத்தில் அவரது புகழை கண்டு பொறமை கொண்ட நய வஞ்சகர்கள் அவரது சரித்திரத்தை மறைக்க நினைத்தார்கள். ஆனால் தற்பொழுது மாவீரனின் புகழ் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்கின்றது.இதனை பறை சாற்றும் விதமாக அவரது நினைவுநாள் செப் 13 யை வீர வணக்கநாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.தற்பொழுது மாவீரனுக்கு மணிமண்டபம் தச்சன் விளையில் கட்டவேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது .

வாழ்க மாவீரனின் புகழ்,வளர்க மாவீரனின் புகழ்

Exit mobile version