Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

படே குலாம் அலி கான்

OLYMPUS DIGITAL CAMERA

ஒப்பற்ற பாட்டியாலா கரானாக்களை சார்ந்தவரான உஸ்தாத் படே குலாம் அலி கான் அவர்கள், இந்தியாவில், 20 ஆம் நூற்றாண்டின் இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் ‘ராஜாவாக’ கருதப்பட்டவர். சொல்ல போனால், மக்கள் பலரும் அவருடைய குரலால் ஈர்க்கப்பட்டு, அதன் மேல் காதல் வயப்பட்டதால், அவரை 20 ஆம் நூற்றாண்டின் ‘தான்சென்’ என்று அழைத்தனர். நல்லது மற்றும் மோசமான அனுபவங்கள் நிறைந்த ஒரு ஒழுங்கற்ற வாழ்க்கை, உஸ்தாத் குலாம் அலி கான் அவர்களுக்கு அமைந்ததால், அவர் தனது உடல், மனம் மற்றும் ஆன்மீக சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, இந்துஸ்தானி இசையைக் கற்றார். 1944 ஆம் ஆண்டு, அவர் பதினான்கு வயது சிறுவனாக இருந்த போதே, அவர் ‘இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் அரசராக’ திகழப்பட்டார். உஸ்தாத் படே குலாம் அலி கான் அவர்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 2, 1902

பிறந்த இடம்: கசூர், பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியா

இறப்பு: ஏப்ரல் 25, 1968

தொழில்: பாடகர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

உஸ்தாத் படே குலாம் அலி கான் அவர்கள், பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த பஞ்சாபிலுள்ள கசூர் (இப்போது லாகூரில் உள்ளது) என்ற இடத்தில், ஒரு இந்திய இசை பாரம்பரிய குடும்பத்தில், ஏப்ரல் 2, 1902 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தையான அலி பக்ஷ் கான் ஒரு பிரபலமான பாடகரும், சாரங்கி வித்வானும் கூட.

ஆரம்ப வாழ்க்கை

உஸ்தாத் படே குலாம் அலி கான் அவர்கள், பிரபலமான பாடகரும், இசையமைப்பாளருமான தனது மாமா காலே கான் என்பவரிடமிருந்து முறையான இசைப் பயிற்சி பெற்றார். அவர், ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டார். மேலும், அவர் வெவ்வேறு காலகட்டங்களில், லாகூர், மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் வாழ்ந்து வந்தார். 1947 ஆம் ஆண்டு, இந்தியா பகிர்வின் போது, உஸ்தாத் குலாம் அலி கான் அவர்கள் லாகூரிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர், இந்தியா திரும்பிய அவர், அங்கேயே குடியேறினார். 1957ல், அவர் இந்திய குடியுரிமையையும் பெற்றார்.

தொழில்

உஸ்தாத் படே குலாம் அலி கான் அவர்கள், சாரங்கி வாசித்தும், அவரது மாமா காலே கானின் சில பாடல்களைப் பாடியும், தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 1938ல், தனது முதல் இசை நிகழ்ச்சியை கொல்கத்தாவில் நடத்திய பிறகு, ஒரு பிரபல பாடகர் ஆனார். அவர் தும்ரியின் ஒரு பெரிய ஆதரவாளராக மாறி, மேலும் சில புதுமைகளை அதனுள் புகுத்தினார். அவர் இன்று வரை இசைப்பிரியர்களிடம் பிரபலமாக இருக்கும் ‘யாத் பியா கீ ஆயே’, ‘கேட் நா பிராஹா கி ராத்’, ‘திராச்சி நசரியா கே பான்’, ‘ஆயே நா பாலம்’, மற்றும் ‘கியா கருண் சஜானி’, போன்ற பல்வேறு காயல்கள் மற்றும் தும்ரிக்களை பதிவு செய்தார். துவக்கத்தில், அவர் திரைப்படங்களில் பாட மறுத்தார். எனினும், மிகச் சிறந்த விற்பனை இசைப்பதிவு படமான ‘முகல் இ ஆஸம்’ (1960) என்ற திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடுமாறு அவர் ஒப்புக் கொண்டார். இந்த படத்தில், அவரது குரல் தான்சென்னைக் குறிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டது. அவர், மிக இனிமையான நெகிழ்வான, மற்றும் ஒத்திசைக்குந்தன்மையுடைய குரலைப் பரிசாகப் பெற்றார். இசை மீது அவருக்கு இருந்த முடிவற்ற பேரார்வமே அவருக்கு மகத்தான சக்தியைக்  கொடுத்து, அவரது மரணம் வரை, அவரது மகன் முனாவர் அலி கானின் ஆதரவுடன் இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாட உதவியது. அவர் தனது 42வது வயதைத் தொட்ட போது, இசை பிரியர்களால் ‘இந்துஸ்தானி இசையின் முடிசூடப்படாத ராஜாவாக’ கருதப்பட்டார்.

இசைப் பங்களிப்பு

உஸ்தாத் படே குலாம் அலி கான் அவர்கள், தும்ரிக்களில் பஞ்சாபி நடையின் சாயலை சேர்த்தார், அதுவே தற்போதைய ‘பஞ்சாப்-ஆங் ஆஃப் தும்ரி’ என்று பிரபலமாக உள்ளது. அவர் ‘காயலில்’  புதிய கண்டுபிடிப்புகளைக் கண்ட போதும், தனது வழக்கமான சுவையையும் உயிரோடு வைத்திருந்தார். அவரது பாடும் பாணி, மிகவும் எளிமையானயாகவும், சந்தங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

உஸ்தாத் குலாம் அலி கான் அவர்கள், ‘அலி ஜிவாய்’ என்பவரை மணமுடித்தார். 1930ல், அவர்களுக்கு ‘முனாவர் அலி கான்’ என்ற மகன் பிறந்தான், மேலும் அவரும் ஒரு பெரிய கிளாசிக்கல் பாடகர் ஆவார். 1932ல், குலாம் அலி கானின் மனைவி இறந்து விட்டார். 1968 ஆம் ஆண்டில், தந்தையின் மரணம் வரை அனைத்து கச்சேரிகளிலும் முனாவர் அவருக்குத் துணையாக இருந்தார். அதன் பின்னர், குலாம் அலி கானைத் தொடர்ந்து, முனாவர் தனது தனித்திறமை வெளிப்படும் விதமாக, தனித்து இசை நிகழ்ச்சிகள் வழங்கி வந்தார். 1989 ஆம் ஆண்டில், அவரது மரணம், அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. குலாம் அலி கானின் பேரனும், முனாவர் அலி கானின் மகனுமான ‘ராசா அலி கானும்’ ஒரு இந்துஸ்தானி இசை பாடகராக இருந்து, இசை பரம்பரையின் மந்திரம் மற்றும் பாரம்பரியத்தை உயிருடன் காத்து வருகிறார்.

இறப்பு

உஸ்தாத் குலாம் அலி கான் அவர்கள், பக்கவாதம் என்றொரு நாட்பட்ட நோயால் பல ஆண்டுகள் பாதிக்கப்பட்ட பிறகு, தனது இறுதி மூச்சை ஹைதெராபாத்திலுள்ள பஷீர்பாக் என்ற  அரண்மனையில், ஏப்ரல் 25, 1968 ஆம் ஆண்டு கடைசியாக சுவாசித்தார். நோயால் அவதியுற்ற போதும், அவர் பொது நிகழ்ச்சிகளில் பாடுவதை அவரது மகன், முனாவர் அலி கான் ஆதரவுடன் தொடர்ந்தார்.

விருதுகள்

1962 – ‘சங்கீத நாடக அகாடமி விருது’ பெற்றார்.

1962 – அவருக்கு ‘பத்ம பூஷன் விருது’ வழங்கப்பட்டது.

மரபுரிமை

தற்போதுள்ள ‘உஸ்தாத் குலாம் அலி கான் யாத்கார் சபா’, குலாம் அலி கானின் சீடரான ‘மல்டி கிலானி’ அவர்கள் இந்துஸ்தானி இசையை உயிரோடு நிலைபெறச் செய்வதற்காக அமைத்தார். இந்நிறுவனம், பாரம்பரிய இசையை ஊக்குவிக்கவும், அதன் நோக்கத்தை வாழவைக்கும் விதமாக பல இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்து வருகிறது. தும்ரி திருவிழாவாக அழைக்கப்படும்  ‘சப்ராங் உத்சவ்வை’ ஒவ்வொரு ஆண்டும், இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த விழா, முழுவதுமாக இரண்டு நாட்கள் நடைபெறும்.

காலவரிசை

1902: பஞ்சாப்பிலுள்ள கசூரில் (தற்போது லாகூரில் உள்ளது) பிறந்தார்.

1930: அவருக்கு முனாவர் அலி கான் என்ற மகன் பிறந்தான்.

1932: அவரின் மனைவி இறந்து விட்டார்.

1938: தனது முதல் இசை நிகழ்ச்சியை கொல்கத்தாவில் நடத்திய பிறகு, ஒரு பிரபல பாடகர் ஆனார்.

1947: இந்தியாவின் பகிர்வின் போது பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தார்.

1957: இந்திய குடியுரிமைப் பெற்றார்.

1960: பெரும்வெற்றி கண்ட பாலிவுட் படமான ‘முகல் இ ஆஸமில்’ தனது விலைமதிப்பற்ற குரலால் இரண்டு பாடல்களைப் பாடினார்.

1962: ‘சங்கீத நாடக அகாடமி விருது’ மற்றும் ‘பத்ம பூஷன் விருது’ பெற்றார்.

1968: ஹைதெராபாத்திலுள்ள பஷீர்பாக் அரண்மனையில் இறந்தார்

Exit mobile version