பாகிஸ்தானில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் விழா ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் இந்தியாவால் கார்கில் போரை மறக்கவே முடியாது, இந்தியாவிற்கு தெரியாமலேயே கார்கிலில் 4 பகுதிக்குள் நுழைந்தோம் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முஷாரப்பின் இந்த கருத்து பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் 9 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு, தற்போது தேசத்துரோக வழக்கை முஷாரஃப், எதிர்கொண்டுள்ளார்.
அவ்வப்போது இந்தியா குறித்து சர்ச்கைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் முஷாரஃப், ஏற்கனவே வங்கதேசத்தை உருவாக்கியதில் இந்தியாவின் பங்களிப்புக்கு பதிலடியாகவே கார்கில் போர் நடைபெற்றதாகவும், அனைத்து முனைகளிலும் பழிக்கு பழி கொள்கைகளையே தான் நம்பியதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 1999ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.