Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

இந்தியாவில் அஜித்தை விட விஜய்யே மிகவும் புகழ்பெற்றவர்! சொல்லுகிறது “போர்ப்ஸ்”. (ஆதாரம் உள்ளே)

மிகவும் புகழ் பெற்ற ‘போர்ப்ஸ்’ பத்திரிக்கை இந்த ஆண்டிற்கான டாப் 100 புகழ் பெற்ற மற்றும் செல்வமிக்க நட்சத்திர பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்த வருடம் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். தமிழ் நடிகர்களில் மிகவும் வலிமைவாய்ந்த நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இவர்களில் வழக்கம் போல் விஜய்யே இந்த ஆண்டும் அஜித்தை விட முன்னணியில் உள்ளார். இவர் புகழ்ச்சியில் 80 வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் அஜித் 98 வது இடத்தையே பிடித்துள்ளார். விஜய்யை விட 18 இடங்கள் சரிவு கண்டுள்ளார். இவர்களை விட நடிகர் தனுஷ் 77 வது இடத்தில் இருக்கிறார். இவர் நிறைய ஹிந்தி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும் விஜய்யை விட 9 இடங்கள் பின்தங்கி உள்ளார்.
செல்வந்தர்கள் பட்டியலில் அஜித் மேல்லோங்கி உள்ளார். அவர் 40.33 கோடியும் , விஜய் 33 கோடியும் , ரஜினி 37 கோடியும் வாங்கியுள்ளனர். கடந்த வருடம் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் அஜித்துக்கு மற்ற நடிகர்களை விட சம்பளம் அதிகமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒட்டு மொத்த தரவரிசையிலும் தமிழ் நடிகர்களில் விஜய்யே மேல்லோங்கி உள்ளார். அவர் 41 வது இடத்திலும் , ரஜினி 45 வது இடத்திலும் , அஜித் 51 வது இடத்திலும் உள்ளனர். கழிந்த வருடத்தில் விஜய் 49 வது இடத்தையே பிடித்திருந்தார். இந்த வருடம் 8 இடங்கள் முன்னேறி உள்ளார்.
இவர்களை விட இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் ஒட்டுமொத்த பட்டியலில் 13 வது இடத்திலும் , புகழில் 15 வது இடமும் பெற்றுள்ளார். கடந்த வருடம் மட்டும் 50 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
ஆதாரத்திற்கு கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
forbs India favourite stars top 100 list 2015

Exit mobile version