Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கங்குலி இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் !!!!

Advertisements

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக சவுரவ் கங்குலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக பதவி வகித்த போது, சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் முத்திரை பதித்து பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். மேலும் இளம் வீரர்கள் பலரையும் ஊக்குவித்து மிகப்பெரிய சாதனைகளை படைக்க உதவினார்.

கங்குலி கேப்டனாக பதவி வகித்த காலத்தில் தான், ஹர்பஜன், யுவராஜ், சேவக், காம்பீர், முகமது கைப் போன்ற திறமையான இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version