Flash News World

சோமாலியாவில் இந்திய சரக்கு கப்பலை கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்

இந்தியாவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை சோமாலியா நாட்டு கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

போஸாஸ்ஸோ:

சோமாலியா நாட்டில் அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் பாதுகாப்பு குறைவாக உள்ள அந்நாட்டு கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்களை சிறைபிடிக்கும் கடல் கொள்ளையர்கள், அதிலுள்ள நபர்களையும், பொருட்களையும் சிறைபிடித்து, பிறகு பெரிய அளவிலான பிணைத்தொகையை பெற்ற பின்னர் விடுவித்து வருகின்றனர்.

இதில், கப்பலுக்கு சொந்தமான நாடு அல்லது நிறுவனம் ஒரு தொகையையும், அதில் உள்ள சரக்குகளை பெற்றுக் கொள்ளும் தரப்பினர் ஒரு தொகையும் தருவதால் ஒரு கப்பலை கடத்தினால் போதும் கோடிக்கணக்கான பணத்தை கறந்து விடலாம் என இந்த தீவிரவாதிகள் நம்புகின்றனர்.

கோப்புப்படம்

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்கு சொந்தமான ஒரு சரக்கு கப்பலை சோமாலியா கடல் பகுதியில் கொள்ளையர்கள் சிறைபிடித்து, கடத்திச் சென்றதாக கடல் கொள்ளைக்கு எதிரான கண்காணிப்பு முகமை இன்று தெரிவித்துள்ளது.

About the author

Julier