Flash News

ஜெயலலிதா முதல்வர் ஆவது மேலும் சிக்கலாகிறது- சுப்ரீம் கோட் செல்கிறது வழக்கு

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை முழுமையாக விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான ஒரு வழக்கு. இதனால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம்.என கர்நாடக முதல் மந்திரி சித்தராமைய்யா கூறி இருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசு தலைமை வக்கீல்  

ரவிவர்ம குமார் கர்நாடக சட்டத்துறை அமைச்சர்  ஜெயசந்திராவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். இந்த பரிந்துரை கடிதத்தின் மீது மே 21 ந்தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்  என தெரிகிறது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் ஜூன் முதல் வாரத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.